Sunday, April 26, 2009

சிதறல்கள்...




குருடன்:
ஐயா, என் விரலையும் மை வெய்யுங்க...

அதிகாரி:
யோவ்!!நீயெல்லாம் வந்து என்னத்த ஓட்டுபோட போற??

குருடன்:
என்னயா இப்படி சொல்றீங்க?

அதிகாரி:
பின்ன என்ன? உன்னகே கண்ணு ரெண்டும் தெரியாது..

குருடன்:
கோவிச்சுகாதீங்க! இங்க ஓட்டு போட வரவங்கெல்லாம்
கண்ண துறந்துகிட்டு தான் வராங்களா?
எல்லாருமே ஒரு வகைல என்ன மாதிரி தான்...

(சொல்லியபடியே, தன் கை தடியைத் தரையில் தட்டியபடி வீதிக்கு நகர்ந்த குருடன பாத்துகிட்டு இருந்தாரு அந்த அதிகாரி )

கட்சிக்காரன்:
யோவ்!! என்னையா வேலைய பாக்காம அந்த குருட்டுபயல
பாத்துட்டு இருக்க ??
மை-ய வை, என் தலைவனுக்கு ஓட்டு போடணும் ...

(கட்சி துண்டும், கறுப்புகண்ணாடியும் போட்டிருந்த
அவனைப்பார்த்து மெல்ல யோசித்தபடி )

அதிகாரி:
ஆமாம், (இன்னொரு) குருடனதான் பாத்துட்டு இர்ருகேன்
(சொல்லிய படியே, மையைத் தடவினார்)




"கண்ணிழந்தவனைப்பார்த்து குருடன் என கேலி செய்தான்;
கண்திறந்தபடியே தன் உரிமைகளை விட்டுக்
கொடுத்துக்கொண்டிருந்த மற்றொரு குருடன் "

nandhu

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Saturday, April 11, 2009

சாரல்

தேர்தல் வினோதம்
காவல துர்ரை கலவரம் முடிந்தவுடன் வருகிறது
தீ அணைப்புத் துறை தீ விபத்து அணைந்தவுடன் வருகின்றது
ஆனால் ஓட்டு வாங்க மட்டும்
முண்டி அடித்துக்கொண்டு முன்னால் வருவது
-தேர்தல் வினோதமா??





(என்ன பொறுத்த வரைக்கும் எல்லாருமே ஒன்னு தான்...எல்லாருமே சரியான அரசியல் வாதிகள் தான்.... )

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~